கடந்த முறை ஊர் (அதிராம்பட்டினம்) சென்றிருந்த போது openstreetmap.org ல் நான் தொகுத்த மரங்களின் பட்டியல் (படம்). இன்று இந்த மரங்கள் பல சாய்ந்து விட்டன. நான் வைத்த ஒரு மரத்துடன் இந்த மரஙக்ளும் சாய்ந்தது வருத்தமாக இருக்கிறது. வெறும் மூன்று நாள் விடுமுறையில் சென்றிருந்தும் இவற்றை குறிக்கவேண்டும் என்பதும் எனது பயண நோக்கமாக இருந்தது.
பள்ளிக்குழந்தைகளை வைத்து கணக்கெடுப்பு பயிற்சியுடன் இவற்றை குறிக்க ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்பினேன். (அப்படி ஒரு ஒருங்கிணைப்பு அனுபவம் எல்லாம் இல்லை.)
மரங்களை கணக்கெடுத்து குறிப்பதன் அவசியம் தற்போது இன்னும் அதிகமாகியிருக்கிறது.
எங்குமே இல்லாத வகையில், நமதூரில் குப்பைத் தொட்டிகள், குப்பை சேரும் இடங்களையும் சிலவற்றையும் குறித்திருக்கிறேன். osm ல் சாக்கடை வாய்க்கால், நீர்வழி, தெருவிளக்குகள், மின்மாற்றிகள் என்று சகலத்தையும் குறிக்க முடியும்.
நேற்றைய கஜா புயலில் பிரபலான windy.com தளத்தின் base openstreetmap.org என்பது குறிப்பிடத்தக்கது.
பேரிடர் காலங்களில் நுட்ப வசதிகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. hotosm.org போன்ற தளங்கள் இவற்றிற்கு உதவுகின்றன. கஜா புயல் பாதித்த பகுதிகளைக் கூட்டாக தொகுக்க Task manager ல் ஆக்டிவேட் செய்ய கோரியிருக்கிறேன். அவ்வாறு அங்கு வரும் பட்சத்தில் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் தொகுப்பார்கள்.
இந்த தொகுத்தலில் ஆர்வமிருப்பவர்கள், ஐபோன் வைத்திருப்பவர்கள் “Go Map” App download செய்து தொகுத்தலைத் துவங்கலாம். கணினி வழியே உலாவியில் நேரடியாகவும் தொகுக்கலாம். நுட்ப அறிவுள்ளவர்கள், JOSM எனும் கருவியை தரவிறக்கி தொகுக்கலாம்.
இந்த தளத்தை மற்றும் கருவிகளின் தமிழாக்கம் செய்யும் முயற்சியும் ஒருபுறம் நடக்கிறது. இவற்றிலும் நீங்கள் பங்கெடுக்கலாம். * https://transifex.com/openstreetmap/id-editor/ * https://translations.launchpad.net/josm
புயல் பாதித்த எனது ஊர் அதிராம்பட்டினத்தின் வரைபடம் osm.org/way/425908820#map=15/10.3433/79.3824
討論
由 mdmahir 於 2018年11月18日 07時10分 發表的評論
https://www.gofundme.com/kaja-disaster-relief-fund-adirampattinam